சிக்கன் பிரியாணி

சிக்கன்  பிரியாணி


















































   

  1. தேவையான பொருட்கள்
  2. 1/2 -கிலோ கோழி கறி
  3. 2    - டம்ளர் பாஸ்மதி அரிசி
  4. 3    - பெரிய வெங்காயம்
  5. 2    - தக்காளி
  6. 2    - பச்சை மிளகாய்
  7. கையளவு கொத்தமல்லி
  8. கையளவு புதினா
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 1/4 கப் தயிர்
  14. 1 பட்டை
  15. கிராம்பு
  16. பிரியாணி இலை
  17. 1 ஸ்பூன் சோம்பு
  18. 3 டம்ளர் தண்ணீர்
  19. 3 மேசைக்கரண்டி எண்ணெய்
  20. 1 மேசைக்கரண்டி நெய்

சமைக்கும் முறை 

  1. ஸ்டெப் 1

             

    கோழி கறியை  மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கழுவி  வைக்கவும் . பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
                        




  1. ஸ்டெப் 2

     சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
         


  2. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு புதினா,கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விடவும்.தயிர் சேர்த்து நன்கு கலந்து விட்டு வதக்கவும். பிறகு நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கோழி கறியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.மூடி வைத்து கறி பாதி அளவு வெந்து தண்ணீர் விட்டு வரும் வரும் வரை வேக வைக்கவும்.


  3. ஸ்டெப் 3

    பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். தண்ணீர் ஒரு கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து கலந்து விடவும். சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.


    சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்


  4. ஸ்டெப் 4

          விசில் போனதும் மூடியை திறந்து பக்குவமாக கிளறி விட்டு 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி 5 நிமிடம் மூடி வைத்து பிறகு சூடாக பரிமாறவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.






Comments